நீட் தேர்வு தொடர்பான திமுகவின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2022-ம் நீட் தேர்வு எழுத அதிக அளவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ள மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதைக் குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அந்தப் பதிவில், “நீட் தேர்வுக்கு அதிக அளவு விண்ணப்பித்து முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பதில் அளித்துள்ளனர். திமுகவின் அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை” என்று தெரிவித்துள்ளார்.