பராமரிப்பு பணி காரணமாக சென்னை தாம்பரம் பகுதியில் 27-ம் தேதி ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மின் வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

“சென்னையில் 27.11.2021 தேதி சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதியில் ஜி.எஸ்.டி ரோடு, இந்திர காந்தி ரோடு, ஒலிம்பிய கோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, திருசெந்தூர் நகர், திருத்தணி நகர், பல்லவா பூங்கா, பெருமாள் நகர் பகுதி, 200 அடி துரைப்பாக்கம் சாலை, அழக்கப்பா நகர், ஏ.ஆர்.ஜி நகர். உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்கு தடை செய்யப்படும்.”

இவ்வாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.