PF balance check online: மொத்த பிஎஃப் பேலன்ஸ் விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.

 

பிஎஃப் (PF) அல்லது இபிஎஃப் (EPF) என்று அழைக்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund) ஆனது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (Employees’ Provident Fund Organization – EPFO) உறுப்பினர்களுக்கான சேவிங்க்ஸ் அக்கவுண்ட் ஆகும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பணியாளரும் மற்றும் முதலாளியும் தங்கள் அடிப்படை வருமானத்தில் 12% ஐ இந்த பிஎஃப் அக்கவுண்ட்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பாக வழங்குகிறார்கள். அப்படியான பிஎஃப் அக்கவுண்டில் உள்ள உங்களின் பேலன்ஸ் தொகையை நீங்கள் சரி பார்க்க விரும்பினால் உங்களுக்கு ஒன்றல்ல, மொத்தம் நான்கு வழிகள் உள்ளன.

எஸ்எம்எஸ் வழியாக பிஎஃப் பேலன்ஸை செக் செய்வது எப்படி?

உங்கள் பிஎஃப் அக்கவுண்ட் பேலன்ஸை எஸ்எம்எஸ் வழியாக செக் செய்ய 7738299899 என்ற எண்ணிற்கு “EPFOHO UAN ENG” என்கிற டெக்ஸ்ட்-ஐ அனுப்பவும். உங்களின் கடைசி பிஎஃப் பங்களிப்பு மற்றும் மொத்த பிஎஃப் பேலன்ஸ் விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். இந்த செயல்முறை உங்கள் யுஏஎன் (UAN) ஐ வழங்காமலோ அல்லது இணைய அணுகல் இல்லாமலோ கூட உங்கள் பிஎஃப் பேலன்ஸை செக் செய்ய அனுமதிக்கும். இருப்பினும், பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மட்டுமே எஸ்எம்எஸ் அனுப்பப்படுவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

 

இபிஎஃப்ஓ இணையதளம் வழியாக பிஎஃப் பேலன்ஸை செக் செய்வது எப்படி?

– இபிஎஃப்ஓ இணையதளத்தில், ‘எம்ப்ளாயி’ செக்ஷனுக்கு சென்று, ‘மெம்பர் பாஸ்புக்’ என்பதை கிளிக் செய்யவும்.

– லாக்-இன் செய்ய உங்கள் யுஏஎன் மற்றும் பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தவும்.

– இப்போது உங்களின் பிஎஃப் பாஸ்புக் உடன் நீங்கள் சம்பாதித்த பிஎஃப் வட்டி விவரங்களும் தோன்றும்.

– உங்கள் யுஏஎன் ஒன்றுக்கு மேற்பட்ட பிஎஃப் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு அக்கவுண்ட்டின் விவரங்களையும் உங்களால் அணுக முடியும். பேலன்ஸை சரிபார்க்க, பொருத்தமான மெம்பர் ஐடி-யை கிளிக் செய்ய வேண்டும்.

உமாங் ஆப் வழியாக பிஎஃப் பேலன்ஸை செக் செய்வது எப்படி?

குறிப்பிட்ட ஆப்பை டவுன்லோட் செய்யாதவர்கள், முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து யுமாங் (UMANG) ஆப்பை பதிவிறக்கவும். இந்த ஆப் வழியாக உங்கள் பிஎஃப் பேலன்ஸை மட்டுமில்லாமல், க்ளைய்ம் ஸ்டேட்டஸ் மற்றும் கேஒய்சி ஸ்டேட்டஸ் போன்ற விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்.. மிடில் கிளாஸ் மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தை மிஸ் செய்யாதீர்கள்!

மிஸ்டு கால் வழியாக பிஎஃப் பேலன்ஸை செக் செய்வது எப்படி?

மிஸ்டு கால் நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் பிஎஃப் பேலன்ஸை செக் செய்ய, உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 011-22901406 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். இந்த செயல்முறை முற்றிலும் இலவசமானது மற்றும் இதன் கீழும் நீங்கள் உங்களின் யுஏஎன் விவரத்தை வழங்க வேண்டிய அவசியம் இருக்காது.

மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தும் முன்னர், நீங்கள் உங்களின் மொபைல் நம்பரை உங்கள் பேங்க் அக்கவுண்ட், ஆதார் மற்றும் பான் நம்பர் உடன் இணைத்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளவும்.