‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எந்த நடிகர், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது எந்த நடிகர், எந்தக் கதாபாத்திரம் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலைப் படக்குழுவினர் வெளியிடவில்லை.

இணையத்தில் வெளியான பட்டியலின்படி ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களின் பட்டியல்:

Mani Ratnam 's Ponniyin Selvan: 15 principal characters, 15 adept actors -  Who's playing who in the- Cinema express

சுந்தர சோழர் – பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி
வந்தியத் தேவன் – கார்த்தி
குந்தவை – த்ரிஷா
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி – ஐஸ்வர்யா லட்சுமி
வானதி – ஷோபிதா
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்
கடம்பூர் சம்புவரையர் – நிழல்கள் ரவி
மலையமான் – லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் – பிரபு
சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்
ரவிதாசன் – கிஷோர்
சேந்தன் அமுதன் – அஸ்வின்
கந்தன் மாறன் – விக்ரம் பிரபு
மதுராந்தகன் – அர்ஜுன் சிதம்பரம்
பார்த்திபேந்திர பல்லவன் – ரஹ்மான்
குடந்தை ஜோதிடர் – மோகன்ராம்