வெயிலின் தாக்கம் காரணமாக ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலமைச் செயலகத்தில் நடந்து வரும் ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றுள்ளார். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகவுள்ளது.