மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவருக்கு ரூ.50,000 நிவாரணம் தர பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.