சென்னை: நியாய விலைக் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நியாய விலை கடை பணியாளர்கள் , அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

 

இது தொடர்பாக கூடடுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் அனைத்து பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றிக்கையில், “வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ” No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்கள் தொடர்பான விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த போராட்டம் காரணமாக சேவைகள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.