உள்நாட்டு விமானப் பயணத்துக்கான குறைந்தபட்சக் கட்டணம் மற்றும் அதிகபட்சக் கட்டணத்தை உயர்த்தி மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Inside The Aeroplane Pictures | Download Free Images on Unsplash

இதன்படி விமானப் பயணக் கட்டணம் 9.83 சதவீதத்திலிருந்து 12.82 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
2 மாதம் ஊரடங்கிற்குப்பின், கடந்த மே மாதம் 25-ம்தேதி இதேபோன்று விமானப் பயணத்தின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணத்தை மத்திய அரசு மாற்றி அமைத்த நிலையில், அடுத்த 2 மாதங்களில் மீண்டும் உயர்த்தியுள்ளது.

குறைந்தபட்ச கட்டண உயர்வு என்பது, நிதிநெருக்கடியால் திணறிவரும் விமான நிறுவனங்கள் பயன்பெறவும், அதிகபட்ச கட்டண உயர்வு என்பது, விமானப் பயணத்துக்கு தேவை அதிகரிக்கும்போது, கட்டணத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்த்தாமல் இருக்கவும் அளவுகோல் வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

40 நிமிடங்களுக்கு உள்ளான பயணத்துக்கு இதற்கு முன் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2600 ஆக இருந்த நிலையில் அது ரூ.2,900 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்தபட்சமாக, 12.82 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.8,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

40 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரையிலான பயண நேரத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3,300லிருந்து ரூ.3,700ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பயண நேரத்தில் அதிகபட்சமாக 12.34 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ,11,000 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

60 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரையிலான பயண நேரத்துக்கு குறைந்தபட்ச பயணக் கட்டணம் ரூ.4,500 ஆகவும், அதிகபட்சமாக 12.82 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.13,200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்களுக்கு குறைந்தபட்சக் கட்டணம் தற்போது ரூ.4,700 ஆக இருக்கிறது, இது ரூ.5,300ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்ந்தபட்சக் கட்டண அளவு 12.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

120-150 நிமிடங்களுக்கு குறைந்தப் பட்ச பயணக் கட்டணம் ரூ.6,100 ஆக இருந்தநிலையில்,ரூ.6,700 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்தபட்சக் கட்டணம் 12.42 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

150-180 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு ரூ.7,400 ஆக இருந்த நிலையில் அது ரூ.8,300ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, உயர்ந்தபட்சமாக 12.74 % உயர்த்தப்பட்டுள்ளது.

180 முதல் 210 நிமிடங்கள் வரை ரூ.8,700 கட்டணாக இருக்கும் நிலையில் அது ரூ.9,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 12.39% அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு தவிர பாதுகாப்புக் கட்டணம், விமானநிலைய பயனாளிகள் கட்டணம், ஜிஎஸ்டி வரி போன்றவை சேர்த்து பயணிகளிடம் வசூலிக்கப்படும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.