சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், தினை இட்லி, கொள்ளு இட்லி, குதிரைவாலி இட்லி, மூங்கில்அரிசி இட்லி, கருப்பு கவுனி தோசை, அவுல் ரொட்டி, ராகி இடியாப்பம், சத்துமாவு கஞ்சி, உளுந்து கஞ்சி, சாமை உப்புமா, ராகி மசாலா பூரி ஆகியவை தயாரித்தல் மற்றும் தொழில் விவரங்கள் குறித்து கற்றுத் தரப்படும்.
ஆண், பெண் இரு பாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம். வேலைக்கு செல்லவும், சுயமாக தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். ஆக. 28-ல் தொடங்கி 30-ம் தேதி வரை காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை பயிற்சி நடைபெறும்.
இதில் பங்கேற்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல்படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18-க்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி குறித்து கூடுதல் விவரங்களை 81227 17494, 82483 09134 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.