தெற்கு ரயில்வேயில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ள மேலும் 48 ரயில்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் முதல் கட்டமாக 132 விரைவுரயில்களின் நேரமும், 2-வது கட்டமாக 40ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டன. இந்நிலையில் 3-வது கட்டமாக 48 ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நிஜாமுதீன் – கன்னியாகுமரி (06012), நாகர்கோவில் – சாலிமார் (02659), ஹவுரா – கன்னியாகுமரி (02665), மும்பை – நாகர்கோவில் (06351), திருநெல்வேலி – காந்திதாம் (09423/09424), ஜெய்பூர் – கோவை (02970), மதுரை – எழும்பூர் (02638), சென்னை சென்ட்ரல் – திருப்பதி (06203), புதுச்சேரி – சென்னை எழும்பூர் (06116) உட்பட 48 விரைவு ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான ரயில்களின் நேர மாற்றம் 4-ம் தேதி முதலும், சில ரயில்களின் நேர மாற்றம் 6, 7, 8-ம் தேதி முதலும்அமலாகும். நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த விபரங்களும் ரயில்வேஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.