ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தால் வீடு தேடி டெலிவரி செய்யும் சேவை தற்போது எங்கும் பரவி வருகிறது.

ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய் ஒன்று உணவு டெலிவரி செய்வது போல் பார்சலுடன் செல்லும் காட்சி படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாயை பலர் கடந்து சென்றாலும் அவர்களை அது பொருட்படுத்தவில்லை.

நியூயார்க்கில் புதிய டெலிவரி சர்வீஸ் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இணையதளங்களில் ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.