மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. விரைவில் 60 ஆயிரம் புள்ளிகளை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பத்திரம் வாங்குவதையும் குறைக்கலாம் என்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் கண்டு காணப்படுகின்றது. மேலும் இந்திய பொருளாதாரம் குறித்த கணிப்புகளும் சாதமாக வந்து கொண்டுள்ளன. இதனால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. எனினும் சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தக நேர இறுதியில் பிஎஸ்இ சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்து 59,885 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி 276 புள்ளிகள் உயர்ந்து 17,800 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிதித்துறை சார்ந்த பங்குகள் கணிசமான லாபம் ஈட்டியுள்ளன. பஜாஜ் ஃபின்சர்வ் 5.7 சதவிகிதத்தை திரட்டி பிஎஸ்இ -யில் லாபம் பெறுபவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வங்கித்துறை பங்குகளும் ஏற்றத்தில் உள்ளன.

ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை பிஎஸ்இ-யில் தலா 1-3 சதவிகிதம் லாபம் ஈட்டியுள்ளன. மற்றும் குறியீட்டு பெல்வெதர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

கோத்ரெஜ் பிராபர்டிஸ் பங்குகள் 52 வாரங்களில் அதிகபட்சமாக 2,120 ரூபாயைத் தொட்டது. மற்ற ரியல் எஸ்டி பங்குகளில், டிஎல்எஃப், ஓபராய் ரியால்டி, சன்டெக் ரியால்டி, பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் ஆகியவை பிஎஸ்இ-யில் தலா 1-5 சதவிகிதம் அதிகரித்துள்ளன.