துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் அனைவரும் ஒருமித்து நின்று உதவுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்படுத்தியுள்ள பேரழிவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இதனால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அளவிலான உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சேதங்கள் வேதனையளிக்கிறது.
இந்த துயர்மிகு நேரத்தில் என்இதயம், பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் மக்களுக்காக இரங்குகிறது. நாம் அனைவரும் ஒருமித்து நின்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்