ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் வழங்கும் குழுக்களுடன், கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார்.

நாடு தழுவிய கிராமசபைகளும் ஜல் ஜீவன் இயக்கத்தில் பங்கு பெறும். கிராமசபைகள் கிராம தண்ணீர் வழங்கல் அமைப்புகளின் திட்டமிடல் மற்றும் மேலாண்மை பற்றி விவாதிப்பதோடு நீண்ட கால தண்ணீர் பாதுகாப்பிற்கும் வேலை செய்கிறது.

கிராம தண்ணீர் வழங்கு அமைப்புகளின் திட்டமிடல், செயல்படுத்தல், மேலாண்மை, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் தண்ணீர் வழங்கும் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் சீராக நீண்டகால அடிப்படையில் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்குகிறது.

6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 3.5 லட்சம் கிராமங்களில் தண்ணீர் வழங்கும் குழுக்கள், கிராமப்புற தண்ணீர் மற்றும் துப்புரவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கள பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி நீரின் தரத்தை பரிசோதிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம் பற்றி பிரதமர் மோடி ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்க 15 ஆகஸ்ட், 2019 அன்று, ஜல் ஜீவன் இயக்கத்தை அறிமுகம் செய்தார் அந்த இயக்கம் தொடங்கிய நேரத்தில், 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், 5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் வழி தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை, சுமார் 8.26 கோடி (43%) கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெற்றுள்ளன.

78 மாவட்டங்கள், 58 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1.16 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளும் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெறுகின்றன. இதுவரை, 7.72 லட்சம் (76%) பள்ளிகள் மற்றும் 7.48 லட்சம் (67.5%) அங்கன்வாடி மையங்களில் குழாய் வழி தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம் மாநிலங்களுடன் இணைந்து 3.60 லட்சம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. மேலும், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் கிராமங்களில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்காக 15 வது நிதி ஆணையத்தின் கீழ் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கு 1.42 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திநிலையில் ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் வழங்கும் குழுக்களுடன், கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறார்.

பயனாளர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவும், இத்திட்டத்தின்கீழ் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுக்கான ஜல் ஜீவன் இயக்க செயலியை பிரதமர் அறிமுகப்படுத்துகிறார்.

இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் பெருநிறுவனம் அல்லது வசதிபடைத்தவர்கள் ஒவ்வொரு கிராமப்புற வீடு, பள்ளி, அங்கன்வாடி மையம், ஆசிரமங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கு குழாய் வழி தண்ணீர் இணைப்பை வழங்குவதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய தேசிய ஜல் ஜீவன் நிதி திரட்டலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.