முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்தத் தீ விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது. 

சென்னை அண்ணா சாலை, சாந்தி தியேட்டர் அருகேயுள்ள கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சென்னை எழும்பூர் பகுதியிலிருக்கும் நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் துரிதமாகச் செயல்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் ராட்சத இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்டடத்தில் சிக்கியிருந்த 32 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்தத் தீ விபத்து நேரிட்டதாகத் தெரிய வந்துள்ளது. அந்தக் கட்டடத்தில் மட்டும் சுமார் 20-க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.