இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இலவச ஆன்லைன் விண்வெளி அறிவியல் படிப்புக்கு 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

‘விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் மேலோட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடநெறியானது விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களில் மாணவர்களுக்கு அறிவையும் விழிப்புணர்வையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

 • இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
 • ஒரு மாத படிப்பு 6 ஜூன் 2022 முதல் தொடங்குகிறது.
 • இது பிரபல விண்வெளி அறிவியலாளர்களால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்பு
 • ஒவ்வொரு வீடியோ அமர்வுக்குப் பிறகும் ஒரு வினாடி வினா நடத்தப்படும்.
 • மாணவர்களுக்கு IIRS-இஸ்ரோ சான்றிதழ்கள் வழங்கும்.
 • பாடத்திட்டத்தில் விண்வெளி தொழில்நுட்பம், விண்கல அமைப்புகள், வானியல், விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் வானிலை, கிரக புவி அறிவியல் போன்றவை உள்ளன.
 • மாணவர்கள் தகவல்களைப் பிரித்தெடுப்பதற்கான செயற்கைக்கோள் படங்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்
 • ஆன்லைன் தரவுக் களஞ்சியங்களிலிருந்து ஜியோடேட்டாவை அணுகும் வசதி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
 • பாடப் பங்கேற்புச் சான்றிதழைப் பெற, வினாடி வினாவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும், வீடியோ அமர்வுகளில் 70 சதவீத வருகையும் அவசியம்.
 • ஆங்கில வழி படிப்பு இது
 • மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக் கலந்துரையாடல்களில் பதிவு செய்யலாம்
 • படிப்பின் கடைசி நாள் வரை மாணவர்களுக்கு அனைத்து அமர்வுகளின் கானொளிகளை அணுகும் வசதி அளிக்கப்படும்.
 • எப்படி விண்ணப்பிப்பது?
 • அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் படிப்புக்குப் பதிவு செய்யவும்.
 • உள்நுழைவுத் தரவுகள் (கடவுச்சொல்)உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
 • பதிவு செய்வதற்கு முன் அதிகாரப்பூர்வ சிற்றேட்டைப் பார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

 • பாடநெறி தொடங்கும் தேதி – 6 ஜூன் 2022.
 • பாடநெறியின் முடிவு தேதி – 5 ஜூலை 2022.