சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.

சந்திரமுகி 2 முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்‌ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் விநாயகர் சதுர்த்தியை(செப்.15) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Chandramukhi 2 Vettaiyan : வேட்டையன் ராஜாவாக மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸ்... இணையத்தை கலக்கும் சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.மேலும், இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.