ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்ததோடு, திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டுவருகிறது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் புத்தம் புதிய BMW X7 கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு கார் மாடல்களை பார்வையிட்ட ரஜினிகாந்த், BMW X7 காரை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து அவர் தேர்வு செய்த காரின் சாவியை, ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கினார். இதுதொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமனான சன் பிக்சர்ஸ் தன் X பக்கத்தில் வெளியிட்டுள்ளது.