“கரோனாவால் சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரி தியா குப்தா (12) என்ற சிறுமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதார துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்து சோதனை செய்யப் பட்டுள்ளது. சிறாருக்கான இந்த மருந்துக்கு அனுமதி கிடைத்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.