இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி நடந்துவந்த வெளியீட்டுப் பணிகளில் மணிரத்னம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளே இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்னூட்டங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.