108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் சுமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் 69-வது கோயிலாகப் போற்றப்படுகிறது. அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில், இமயமலையின் குளிர் காரணமாக வருடத்தில் 6 மாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்