சென்னை: சென்னையில் நமக்கு நாமே திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 354 பணிகளில் 143 பணிகள் நிறைவு என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 37 திட்டப் பணிகள் ஒப்பந்த நிலையிலும், 256 திட்டப் பணிகளை மேற்கொள்ள பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. 91 திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 143 பணிகள் முடிந்ததாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.