பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ),அதன் இன்ஸ்ட்டியூட் ஆஃப்நியூக்ளியர் மெடிசன் அண்ட்அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) ஆய்வக அமைப்பும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸிடி-குளுகோஸ் (2-டிஜி) என்ற கரோனா எதிர்ப்பு மருந்தை தயாரித்தது. இந்த மருந்து மூன்று கட்ட சோதனைகளில் வெற்றிகண்ட பிறகு கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த கடந்த மாதம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.
தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் இந்த மருந்து இருக்கும். இந்நிலையில், இதன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமை பிடிஆர் பார்மா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.- பிடிஐ