திருவள்ளூர் மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனது மற்றும் திருடு போனது தொடர்பாக பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்தன.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் கூடுதல் எஸ்.பி.மீனாட்சி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாவட்ட சைபர் கிரைம் உதவியோடு காணாமல் போன, திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி 360செல்போன்களை கண்டுபிடித்தனர். மேலும், செல்போன்களை வழிப்பறி செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில் 3 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 119 செல்போன்களைஉரியவர்களிடம் எஸ்.பி. சிபாஸ் கல்யாண் ஒப்படைத்தார். மேலும், பொதுமக்கள் உரிய ஆவணங்கள், ரசீதுகள் இல்லாமல் செல்போன்கள் வாங்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.