இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,022 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,832 என உள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 192.38 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.75 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,099 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,99,102 என அதிகரித்துள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.69 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.49 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை மொத்தம் 84.70 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,94,812 பேருக்கு நாட்டில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.