சுமார் 400 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் ஹேக்கர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இஸ்ரேல் நாட்டு சைபர் உளவு நிறுவனமான ஹட்சன் ராக உறுதி செய்துள்ளது. அதற்கு ஆதாரமாக அந்த ஹேக்கர் 1000 ட்விட்டர் பயனர்களின் தரவுகளை பகிர்ந்து உள்ளதையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இதனை அந்த ஹேக்கர் ட்விட்டர் அல்லது எலான் மஸ்க் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு கசிந்துள்ள பயனர் தரவுகளில் சல்மான் கான், சுந்தர் பிச்சை போன்ற பிரபலங்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர் மூலம் தன்னை அணுகினால் தன்னிடம் உள்ள பயனர் தரவுகள் சைபர் குற்ற ஆசாமிகள் வசம் செல்லாமல் தவிர்க்கலாம் என அவர் சொல்லி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிஐ குறைபாடு காரணமாக பயனர் தரவுகளை ஹேக்கர்கள் சேகரித்திருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.