இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் (எல்ஐசி) வெளியிட்ட அறிவிப்பில்கூறியிருப்பதாவது: எல்ஐசி தனது ஜீவன் அக்ஷய் VII மற்றும் புதிய ஜீவன் சாந்தி ஆகிய பாலிசி திட்டங்களின் வருடாந்திர விகிதங்களை திருத்தியுள்ளது. இந்த மாற்றம் கடந்த பிப்.1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாற்றப்பட்ட விகிதங்களுடன் திட்டங்கள் விற்பனையில் உள்ளன.
வருடாந்திர தொகையை எல்ஐசியின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள கால்குலேட்டர் மூலமாகவும், பல்வேறு எல்ஐசி செயலிகள் மூலமாகவும் கணக்கிடலாம்.
திருத்தம் செய்யப்பட்ட எல்ஐசியின் பாலிசி திட்டங்களை நடப்பில் உள்ள விற்பனை வழிமுறைகளோடு எல்ஐசியின் புதிய விற்பனை வழியான பொது மக்கள் சேவை மையங்கள் மூலமும் பெறலாம். இத்திட்டம் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு www.licindia.in என்ற வலைதளம் அல்லது ஏதேனும் எல்ஐசி கிளையை தொடர்பு கொள்ளலாம் என எல்ஐசி தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.