சென்னை: பொதுக்குழுவுக்கு அதிமுகவினர் வருவதால் பூவிருந்தவல்லி- மதுரவாயல் இடையே 5 மணிநேரத்திற்கு மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது. பூவிருந்தவல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் தாமதமாக தொடங்க உள்ளது. வழிநெடுகிலும் பழனிசாமிக்கு தொண்டர்கள் வரவேற்பு காரணமாக பொதுக்குழு கூடுவதில் தாமதம் ஏற்பட்டது.