முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக் கப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது.
ஆவின் மற்றும் அரசுத் துறை களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கே.டி.ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சத்துணவுத் திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.11 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சாத்தூரைச் சேர்ந்த ஒருவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப் பிரிவுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிய காவல் கண்காணிப்பாளர் மனோ கரை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.