செப்டம்பர் மாதம் வங்கிகள் மொத்தம் 12 நாட்களுக்கு இயங்காது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் பணம் செலுத்துதல், ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. இதன் காரணமாக மக்களின் பெரும்பாலான பணிகள் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல சில வங்கி பணிகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டாலும், சில முக்கியமான வேலைகளை முடிக்க வங்கிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், வங்கிக்கு செல்லும் முன்பு வங்கி செயல்படும் நாட்கள் மற்றும் நேரங்களை பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம்.

பொதுவாக ரிசர்வ் வங்கி மாத விடுமுறைகளை மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் பட்டியலிடும். அதாவது, ‘பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை’, மற்றும் ‘நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை’ மற்றும் ‘வங்கிகள் கணக்குகளை மூடுவது ’ ஆகியவற்றின் கீழ் அறிவிக்கும். அதன்படி செப்டம்பர் மாதத்தில் பட்டியலிடப்பட்ட வார இறுதி நாட்கள் அல்லாத விடுமுறைகள் ‘விடுமுறை பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின்’ கீழ் வருகின்றன. ஏனெனில் செப்டம்பர் மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன.

ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அனைத்து பண்டிகைகளும் எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படாது. எனவே, விடுமுறை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அந்த வகையில், இந்த மாதம் ஸ்ரீமந்த் சங்கர்தேவ் திதி, கர்ம பூஜை, இந்திராயத்ரா மற்றும் நாராயண குரு சமாதி நாள் ஆகிய பண்டிகைகள் வருகின்றன. இதனை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாய விடுமுறையாகக் கருதுகிறது. எனவே, இந்த பண்டிகையை கொண்டாடும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படும்.

அதேபோல இந்த மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் நாடு முழுவதும் அந்த ஒரு நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும். அந்த வகையில், செப்டம்பர் மாதம் வங்கிகள் மொத்தம் 12 நாட்களுக்கு இயங்காது. அதில் மொத்தம் 6 நாட்கள் வார இறுதி நாட்கள் ஆகும். அதாவது, செப்டம்பர் 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வார விடுமுறை என்பதால் அந்த 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது. மீதமுள்ள விடுமுறை நாட்கள் எப்போது? அது எந்தெந்த மாநிலங்களுக்கு பொருத்தும் என்பதை பின்வருமாறு விரிவாக காண்போம்.

மாநில வாரியாக விடுமுறை பட்டியல் இதோ:

செப்டம்பர் 8: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பண்டிகை காரணமாக கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.

செப்டம்பர் 9: ஹரித்தலிகா தீஜ் பண்டிகை. இது கேங்டாக்கில் கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம் அப்பகுதியில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 10: இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவதால், அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை இருக்கும்.

செப்டம்பர் 11: விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இரண்டாம் நாள் என்பதால் பல இடங்களில் விடுமுறை வழங்கப்படலாம்.

செப்டம்பர் 17: ராஞ்சி மாநிலத்தில் அன்று கர்மால் பூஜை கொண்டாடப்படுவதால் அங்கு செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

செப்டம்பர் 20: கேங்டாக் பகுதியில் ‘இந்திர யாத்திரை’ பண்டிகை வருவதால் அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றொரு விடுமுறையைக் காண உள்ளது.

செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.