நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய பாதிப்பை ஒப்பிடுகையில் 12 ஆயிரம் என்ற அளவில் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 30,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கரோனாவில் இருந்து 3,19,59,680 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 36,275 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,70,640 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 350 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,38,560 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 64,05கோடியாக உள்ளது.

கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கரோனா தொற்று குறையாமல் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 29,836 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். 75 பேர் தொற்றுக்கு பலியாகினர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.