விருதுநகரில் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.விருதுநகரில் கௌசிகா நதி அருகே நிலா நகரில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை நேற்று காலை மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் திறந்தபோது, பின்பக்கச் சுவரில் துளையிடப்பட்டிருந்தது. கடையிலிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடு போயிருந்தன. எனினும், மேஜை டிராவில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருடுபோகாமல் பத்திரமாக இருந்தது. பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.