ஆன்லைன் சூதாட்டங்களை மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம்தான் தடை செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

திரைப்பட நடிகராகவும், அரசியல் தலைவராகவும் வலம் வரும் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்னியின் செல்வன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.  அப்போது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் அவர் நடித்திருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சரத்குமார், இன்னும் 15 நாட்களில் அது குறித்து தனியாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பேச உள்ளதாக கூறினார்.

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசும், உச்சம் நீதிமன்றமும்தான் தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்திற்கான விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன்.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் குறித்து பல கேள்விகள் உள்ளன. அதை விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி விளக்கமாக பதில் அளிக்கிறேன் என சரத்குமார் கூறினார்