இந்திய பாதுகாப்புத் துறையில், நான்கு ஆண்டு காலத்திற்கு இளைஞர்கள் பணியாற்றும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்தின் கீழ், பணியமரத்தப்படும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 4 ஆண்டு காலத்திற்குப் பிறகு, ராணுவப் பதவியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், அகில இந்திய அளவில் 25% அக்னிவீரர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்காக, தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு நடைபெறும் (Merit Based Recruitment Process)
Year | மாதாந்திர ஊதியம் | கையில் கிடைக்கும் தொகை (70%) | அக்னி வீரர் தொகுப்பு நிதி | தொகுப்பு நிதிக்கு அரசு அளிக்கும் தொகை |
முதலாம் ஆண்டு | 30000 | 21000 | 9000 | 9000 |
இரண்டாம் ஆண்டு | 33000 | 23100 | 9900 | 9900 |
மூன்றாம் ஆண்டு | 36500 | 25580 | 10950 | 10950 |
நான்காம் ஆண்டு | 40000 | 28000 | 12000 | 12000 |
4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட தொகை |
ரூ. 5.02 லட்சம் | ரூ 5.02 லட்சம் | ||
நான்கு ஆண்டுகளுக்கு சேவ நிதியில் இருந்து வட்டியுடன் செலுத்தப்படும் தொகை | ரூ. .11.71 லட்சம் |
இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது
இதர சலுகைகள்:
திறன் சான்றிதழ் வழங்கப்படும். உயர்கல்வியில் இணைவதற்கான தரமதிப்பீடு (Credits) வழங்கப்படும்.
உயிரிழந்தோர் நிவாரண நிதி:
அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.
பணியில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.44 லட்சம் வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகள் சேவ நிதியில், இறப்பின் காரணமாக வீரர்கள் செலுத்தப்படாத தொகை வழங்கப்படும்.
பனியின் போது முழு உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ.44 லட்சம் அளிக்கப்படும்.
அக்னிபத் திட்டத்தின்கீழ், 4 ஆண்டு காலத்திற்கு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
புள்ளி விபரங்கள்:
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியம் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 33,09,430 ஆகா உள்ளது. இது, மத்திய அரசு ஓய்வூதியப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 51% ஆகும். அதாவது, பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் 65% சதவிகிதம் தனியாள் சம்பளம் மட்டும் கொடுப்பனவுகள், ஓய்வூதியம், இலவச வைத்திய வசதிகள்,உணவக வசதிகள், காப்புறுதி வசதிகள், வீடு அல்லது வாகனத்திற்கான கடன் வசதிகள் போன்ற காரணங்களுக்கு செலவிடப்படுகிறது. இதன் காரணமாக, இதன் காரணமாக, ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்துவது, மூலதனச் சொத்தை உருவாக்குவது (defence acquisition), ஆராய்ச்சி மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி போன்றவைகளுக்கான செலவீனங்கள் குறைந்து காணப்படுகிறது. எனவே, பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் இல்லாமல் நான்கு ஆண்டுக்கு இளைஞர்களை பணியமர்த்தும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.