தீபாவளி பண்டிகையையொட்டி, ஆவினில் ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40% அதிகம் ஆகும்.
தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக ஒன்பது வகையான சிறப்பு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்படி ஏற்கெனவே உள்ள பால், இனிப்பு பொருட்களுடன் இந்த ஆண்டு 9 புதிய இனிப்பு வகைகள் புதிதாக தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.250 கோடி வரை இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
எனினும், தீபாவளி பண்டிகையையொட்டி ஆவினில் ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனையாகி உள்ளது. ஆனால், இது கடந்த ஆண்டை விட 40% அதிகம் ஆகும். கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ.85 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.