எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் தொகுதியான எடப்பாடி பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில், திமுக 16 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், அதிமுக 13 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எடப்பாடி நகராட்சியாக 1965-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டது முதல் இதுவரை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் இந்நகராட்சி தலைவர் பதவியை பெற முடியாமல் இருந்த திமுக, முதல்முறையாக பெரும்பான்மை வார்டுகளில் வெற்றி பெற்று எடப்பாடி நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

மேலும், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம், கொங்கணாபுரம், நங்கவள்ளி, பூலாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. வனவாசி பேரூராட்சியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.