திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆர்ஜித சேவை 2 ஆண்டுக்கு  பிறகு, குலுக்கல் முறையில் முன்பதிவு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளது. எனவே, திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலக  முன்பதிவு கவுன்டரில் காலை 11 முதல் மாலை 5 மணி வரை. பக்தர்களின் ஆதார் அட்டை அடிப்படையில் பல்வேறு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, அதன் நகல் வழங்கப்படும். தானியங்கி ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு மாலை 6 மணிக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

ஏற்கனவே முன்பதிவு செய்து ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஆர்ஜிதம் அலுவலகத்தில் இரவு 8 மணிக்குள் டிக்கெட் காண்பித்து வருகையை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வராத  பக்தர்களின் டிக்கெட்கள் இரவு 8.30 மணிக்கு  2வது முறை குலுக்கல் செய்யப்பட்டு மற்ற பக்தருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். நாளை (வெள்ளிக்கிழமை) ஏழுமலையானுக்கு அபிஷேகம் உள்ளதால், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் அங்கப் பிரதட்சணம் செய்ய மட்டும் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.