மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டின் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தின் இரண்டாது போஸ்டர் நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டு கால திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இப்படம் வரும் ஓணம் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.