முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவருக்கும்  கருணாநிதிக்கும்  இடையேயான உறவு அவ்வளவு எளிதில்  யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. கலைஞர் கருணாநிதியை பற்றி  தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார்.