கமலின் தீவிர ரசிகர் குறித்து நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்திருந்த நிலையில் அதற்கு இயக்குநர் லோகேஷ்கனகராஜூம், கவுதம் வாசுதேவ் மேனனும் பதிலளித்திருந்தது வைரலாகி வருகிறது.

கடந்த 2006-ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் தற்போது ரி-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், ட்விட்டரில், “கமலின் ஃபேன்பாய் இயக்குநர் சண்டையில் முதலிடம் பிடித்தது கவுதம் வாசுதேவ் மேனன்தான் என தோன்றுகிறது. சாரி லோகேஷ்கனகராஜ்” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த லோகேஷ் கனகராஜ், “சந்தேகமே வேணாம். கவுதம் மேனன் தான்” என பதிவிட்டிருந்தார். லோகேஷின் இந்த பதிலை மேற்கொள் காட்டி ட்வீட் செய்திருந்த கவுதம் வாசுதேவ் மேனன், “இந்த பதிலுக்கு இயக்குநர் கௌதம் மேனன், “லோகேஷ் கனகராஜ் வரும் வரை அப்படி இருந்தது. ஆனால் நாயகன் மீண்டும் வரார் வந்த பிறகு (விக்ரம் படம்) அதுதான் டாப். அதைத் தாண்ட வேண்டும். நல்ல போட்டியாக இருக்கும் லோகேஷ். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிழியாது. அன்பு மட்டுமே” என ஜாலியாக கூறியுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.