கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு, சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனை ஆகியவை இணைந்து எலும்பு மஜ்ஜை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கான முன்பரிசோ தனை, கலந்தாய்வை நடத்தின.

இதுதொடர்பாக மருத்துவ மனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறியதாவது: 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான எலும்பு மஜ்ஜை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வெளியில் ரூ.32 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும். எனவே, இந்த சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்க ரேலா மருத்துவமனையுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு முன்பரிசோதனை, அவர்களுக் கான கலந்தாய்வு முதல்முறையாக நடைபெற்றது. இனி மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை இந்த கலந்தாய்வு நடைபெறும்.

இந்த மாதம் 20 குழந்தைகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள். சிகிச்சைக்கு தேர்வாகும் குழந்தைகளுக்கு சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிகிச்சைக்கு முன்பு தேவை யான பரிசோதனைகள், சிகிச்சை பிறகு தேவைப்படும் கவனிப்பு ஆகியவை கோவை அரசு மருத்து வமனையில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.