கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டுமென இந்திய மருந்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று பாதித்து இயற்கையாக பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையும், தடுப்பூசியினால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கக் கூடிய வீரியமிக்க கொரோனா வகை வைரஸ் ஒமிக்ரான். இந்த வகை வைரசால் இந்தியாவில் 3வது அலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், ஒமிக்ரானுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் பலவீனமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவாக்சினும் ஒமிக்ரானுக்கு எதிராக குறிப்பிட்ட அளவிற்கான பாதுகாப்பை மட்டுமே வழங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2,593 பேருக்குகொரோனா: நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2,593 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 44 பேர் பலியாகி உள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,873 ஆக அதிகரித்துள்ளது.