சென்னை: பல்வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர்.
இதகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியது: ஊதிய நிலை பிரச்சினையால் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வுபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், நடப்பாண்டு பதவி உயர்வுக்குத் தேர்வானவர்களின் உத்தேச பட்டியலில் கூட குழப்பங்கள் உள்ளன.
எனவே, பதவி உயர்வு முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தியும், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று (ஆக.14) கருப்புப் பட்டை அணிந்து பள்ளிக்குச் செல்வார்கள்.