மேஷம்: உங்களின் உழைப்புக்கு ஏற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பூர்வீக வீட்டுப் பிரச்சினைகள் முடிவுறும்.
மிதுனம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் தேவை. பணவரவு உண்டு.
கடகம்: பணப் புழக்கம் கணிசமாக உயரும். உடல் நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
சிம்மம்: காலை 11 மணி முதல் வேலைகள் தடைபட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலை தூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். கலை பொருட்கள் சேரும்.
துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய சொந்த – பந்தங்கள் தேடி வருவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தியானம் செய்யவும்.
விருச்சிகம்: புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்.
தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
மகரம்: காலை 11 மணி முதல் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. புதிய தொழில் தொடங்க முடிவு செய்வீர்கள்.
கும்பம்: நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். இழுபறியாக இருக்கும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.
மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். பழைய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்ப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்