தங்கம் விலை சவரனுக்கு 208 உயர்ந்துள்ளது. தங்கம் கடந்த சில நாட்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரைத் தொடர்ந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைச் சந்தித்தது.

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4849ஆகவும், ஒரு சவரன் விலை ₹38 ஆயிரத்து 792ஆகவும் இருந்தது. ஆனால் நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமுக்கு ₹26 உயர்ந்து 4823க்கும், சவரனுக்கு ₹208 உயர்ந்து, 38 ஆயிரத்து 584க்கும் விற்பனையானது. இந்த விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.