சென்னை ஆலந்தூரில் 26-வது கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். சென்னையில் 55,30,900 பேரில் 99% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கடலூர், கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களில் 100 % கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.