டெல்லியை போல தமிழகத்திலும் நவீன அரசு பள்ளிகள் உருவாக்க ஏப்ரல் 9ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளியை தரம் உயர்த்த முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  3 நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து அரசு பள்ளியை ஸ்டாலின் பார்வையிட்டார்.