தமிழ்நாட்டில் 6,033 அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.