கடலூரில் மழை நீர் முற்றிலும் அகற்றப்பட்டு கட்டிடத்தையும் உறுதி செய்யப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் கன மழையால் தொடங்கப்படாமல் இருந்த 1 ஆம் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள், 15 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பிற்கு வந்தனர்.

தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி, 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்புக்கான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்ககள் நடந்து வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் 15 நாட்களுக்குப் பிறகு மழை விட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு, உற்சாகத்துடன் வந்தனர். கடலூர் புதுபாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு  கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் இனிப்புகள் மற்றும் பூக்கள் வழங்கி வரவேற்பளித்தனர்.

இதே போல் நகராட்சி பள்ளியில் இசை தாளம் முழங்க பள்ளி மாவண மாணவிகளை வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியம்,
கடலூர் மாவட்டத்தில் 2129 பள்ளிகள் உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பு கருதி கொண்டு ஒரு வகுப்பறையில் 20 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பள்ளிகள் 15 நாட்கள் திறக்கப்படாமல் இருந்தன.

மழை நீர் முற்றிலும் அகற்றப்பட்டு கட்டிடத்தையும் உறுதி செய்யப்பட்டு, தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை அவர்களும் இரண்டு மூன்று நாட்களில் வந்துவிடுவார்கள்’ என்று தெரிவித்தார்.