சென்னை: சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்க ஒன்றிய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு இருந்த தடையை அக்டோபர் 31 வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. கடந்த 19 மாதங்களாக சென்னையில் இருந்து மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இல்லை. தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய கல்விக்காக மொரீசியஸ் செல்லக்கூடிய நிலை உள்ளது. மொரீசியஸ், யாழ்ப்பாணத்துக்கு வாரத்துக்கு ஒரு சிறப்பு விமானம் இயக்க ஒன்றிய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.